உள்ளடக்கத்திற்குச் செல்
தமிழ்நாடு, இந்தியா ☎ +91 8300003585 ✉ info@acmaaproperty.com

தனியுரிமைக் கொள்கை

தனியுரிமைக் கொள்கை

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 15-10-2026

ACMAA Property (acmaaproperty.com) உங்கள் தனிப்பட்ட தகவலை எப்படிச் சேகரித்து, பயன்படுத்தி, பாதுகாக்கிறது என்பதை இந்தக் கொள்கை விளக்குகிறது. தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தக் கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

1. நாங்கள் சேகரிக்கும் தகவல்

  • கணக்கு விவரங்கள்: பெயர், மொபைல் எண், மின்னஞ்சல். கடவுச்சொல் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) வடிவில் சேமிக்கப்படும்.
  • சொத்து விவரங்கள்: சொத்து வகை, இடம், பரப்பளவு, விலை அல்லது வாடகை, விளக்கம், புகைப்படங்கள்.
  • விசாரணைச் செய்திகள்: விசாரணை அனுப்புபவரின் பெயர், மொபைல் எண், செய்தி.
  • தொழில்நுட்பத் தகவல்: IP முகவரி, உலாவி வகை, பார்த்த பக்கங்கள், குக்கீகள்.
  • பிடித்தவை: நீங்கள் குறிக்கும் சொத்துகளின் பட்டியல் (கீழே பிரிவு 6-ல் விவரம்).

2. தகவலைப் பயன்படுத்தும் நோக்கங்கள்

கணக்கு உருவாக்குதல், பதிவுகளை ஆய்வு செய்து வெளியிடுதல், தேடுபவர்களுக்குப் பட்டியல்களைக் காட்டுதல், பாதுகாப்பு மற்றும் மோசடித் தடுப்பு, தவறான பதிவுகளை நீக்குதல், புகார்களைக் கையாளுதல், தளப் புள்ளிவிவரங்கள். உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் பணத்துக்காக விற்பதில்லை. விளம்பரம் மற்றும் புள்ளிவிவர சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைக்குத் தேவையான அளவு தகவலைப் பெறலாம் (பிரிவு 5 பார்க்க).

3. பொதுவில் தெரிபவை

  • ஒப்புதல் பெற்ற பட்டியல்களும் அவற்றின் புகைப்படங்களும் பொதுவில் தெரியும். துல்லியமான வீட்டு முகவரியை விளக்கத்தில் எழுத வேண்டாம்; ஊர் அல்லது பகுதி போதும்.
  • வரைபடத்தில் இடம் காட்டும்போது, “தோராயமான பகுதி” (சுமார் 1 கி.மீ.) அமைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • உரிமையாளர் தொடர்பு எண்: உரிமையாளர் தேர்ந்தெடுத்த தொடர்பு முறையைப் பொறுத்து, உள்நுழைந்த பயனருக்கு மட்டுமே எண் அல்லது வாட்ஸ்அப் தொடர்பு காட்டப்படும். “தளம் வழியாக விசாரணை” என்று தேர்ந்தெடுத்திருந்தால், எண் காட்டப்படாது; விசாரணைப் படிவம் மட்டுமே வழங்கப்படும்.
  • தரகர் அல்லது முகவர் வழங்கிய உரிமையாளர் விவரங்கள் நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியும்.
  • நிர்வாகிகள் விசாரணைகளைப் பார்க்கும்போது எண்கள் பகுதியளவு மறைக்கப்படும்.
  • உங்கள் பட்டியலை “எனது கணக்கு” பகுதியில் மறைக்கலாம். முழுமையாக நீக்கக் கோர, பிரிவு 10-ல் உள்ள குறை தீர்ப்பு அலுவலரைத் தொடர்பு கொள்ளுங்கள். சட்டத் தேவைக்காக ஒரு குறைந்த நீக்கப் பதிவு மட்டும் வைக்கப்படலாம்.
  • விசாரணை விவரங்கள் (பெயர், மொபைல், செய்தி) சம்பந்தப்பட்ட பட்டியலின் உரிமையாளருக்கு மின்னஞ்சல் மற்றும் அவரது கணக்குப் பக்கம் வழியாக அனுப்பப்படும்.
  • உங்கள் இருப்பிடம் (GPS), நீங்கள் அந்தப் பொத்தானை அழுத்தும்போது மட்டுமே கோரப்படும். சுயவிவரப் புகைப்படம் ஒப்புதலுக்குப் பிறகே காட்டப்படும்.
  • உங்கள் ஒப்புதல்கள் எப்போது அளிக்கப்பட்டன என்ற நேரம் பதிவு செய்யப்படும்.

4. தகவல் பகிர்வு

தளத்தை இயக்க உதவும் சேவை வழங்குநர்களுடன் மட்டுமே பகிர்வோம்: இணைய வழங்கி (hosting), மின்னஞ்சல், OTP சேவை (MSG91), வரைபடம் (Google Maps), புள்ளிவிவரம், விளம்பரம். சட்டம் கோரினால் அல்லது மோசடி, சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கத் தேவைப்பட்டால் அதிகாரிகளுடன் பகிரலாம்.

5. குக்கீகள், புள்ளிவிவரம், விளம்பரங்கள்

  • தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. உலாவியில் குக்கீகளை முடக்கலாம்; சில வசதிகள் செயல்படாமல் போகலாம்.
  • தளப் பயன்பாட்டைப் புரிந்துகொள்ள Jetpack, Google Analytics / Google Tag Manager (Site Kit) போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம். இவை உங்கள் IP முகவரி, பார்த்த பக்கங்கள் போன்றவற்றைப் பெறலாம்.
  • தளத்தில் Google AdSense அல்லது பிற விளம்பரக் குறியீடுகள் இருக்கலாம். மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்கள் நீங்கள் முன்பு பார்த்த தளங்களின் அடிப்படையில் குக்கீகளைப் பயன்படுத்தலாம்.
  • தளத்தில் WhatsApp, Facebook, Telegram பகிர்வு இணைப்புகள் உள்ளன. அவற்றைத் தொட்டால் அந்தச் சேவைகளின் தனியுரிமைக் கொள்கை பொருந்தும்.

6. பிடித்தவை (சேமித்த சொத்துகள்)

நீங்கள் “பிடித்தவை” என்று குறிக்கும் சொத்துகள்:

  • கணக்கு இல்லாமல் இருந்தால், உங்கள் சாதன உலாவியிலேயே (localStorage) சேமிக்கப்படும்.
  • கணக்குடன் உள்நுழைந்திருந்தால், உங்கள் கணக்கில் சேமிக்கப்படும்.
    இந்தப் பட்டியலைச் சொத்து உரிமையாளர்கள் பார்க்க முடியாது.

7. வணிகத் தொடர்புப் பட்டியல் மற்றும் அழைப்புகள்

தரகர்கள், கட்டுநர்கள், நிறுவனங்கள் ஆகியோரின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், மாவட்டம், தொழில் விவரம் ஆகியவற்றை, தளம் தொடர்பான நிகழ்வுகள் அல்லது அறிவிப்புகளுக்கு எதிர்காலத்தில் அழைப்பதற்காகச் சேமிக்கலாம். அவ்வாறு அழைப்புகள் (WhatsApp, SMS, மின்னஞ்சல் போன்றவை) அனுப்ப, உங்கள் ஒப்புதல் பெறப்படும். இது பதிவுப் படிவத்தில் டிக் செய்வதாக, நேரடிப் பதிலாக அல்லது எழுத்துப்பூர்வ ஒப்புதலாக இருக்கலாம். ஒப்புதல் முன்கூட்டியே டிக் செய்யப்படுவதில்லை. ஒப்புதலின் நிலை, தேதி, வழி ஆகியவை பதிவு செய்யப்படும். “வேண்டாம்” என்று சொன்னால் அழைப்புகள் நிறுத்தப்படும்.

8. புகார் மற்றும் தொடர்புப் பதிவுகள்

சொத்து குறித்த புகார்கள், தொடர்பு கோரிக்கைகள், நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவற்றின் பதிவுகள் மாற்றப்பட்டால் கண்டறியக்கூடிய (tamper-evident) காப்பகத்தில் வைக்கப்படலாம். தவறான பயன்பாடு, மோசடி, சட்டக் கேள்விகளைக் கையாளத் தேவையான காலம் வரை அவை பாதுகாக்கப்படும். இவற்றில் தனிப்பட்ட விவரங்கள் குறைந்த அளவே இருக்கும்.

9. கட்டணச் சேவை

விளம்பர இடம், சிறப்புப் பட்டியல் (முன்னிலைப்படுத்தல்) போன்ற கட்டணச் சேவைகளுக்கான பணம் Razorpay போன்ற மூன்றாம் தரப்புக் கட்டண நுழைவாயில் மூலம் பெறப்படலாம். அட்டை, UPI, வங்கி விவரங்களை நாங்கள் சேமிப்பதில்லை; அவற்றைக் கட்டண நுழைவாயிலே கையாள்கிறது. எங்களிடம் கட்டண எண், தொகை, தேதி, நிலை போன்ற பரிவர்த்தனைப் பதிவுகளும், ரசீதுக்குத் தேவையான உங்கள் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களும் சேமிக்கப்படும். கட்டண நுழைவாயில் உங்கள் தகவலை அதன் சொந்தத் தனியுரிமைக் கொள்கைப்படி பயன்படுத்தும். பணத்திருப்பம் தொடர்பான விவரங்களுக்கு “ரத்து மற்றும் பணத்திருப்பக் கொள்கை” பக்கத்தைப் பார்க்கவும்.

10. பாதுகாப்பு, சேமிக்கும் காலம், தரவு மீறல்

  • தகவலைப் பாதுகாக்க நியாயமான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்கிறோம். எந்த முறையும் முழுமையாகப் பாதுகாப்பானது என்று உறுதி கூற இயலாது.
  • கணக்குத் தகவல் உங்கள் கணக்கு இருக்கும் வரை வைக்கப்படும். கணக்கை நீக்கக் கோரினால் நீக்கப்படும். சட்டம் அல்லது மோசடித் தடுப்புக்குத் தேவையான குறைந்த பதிவுகள் மட்டும் தேவையான காலம் வரை வைக்கப்படலாம்.
  • தனிப்பட்ட தரவு மீறல் நடந்தால், சட்டம் கோரும் வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவிக்க முயற்சிப்போம்.

11. உங்கள் உரிமைகள்

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (DPDP Act) கீழ், உங்கள் தகவலைப் பார்க்கவும், திருத்தவும், நீக்கக் கோரவும், புகார் அளிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் அளித்த ஒப்புதலை எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம். அதற்குக் கீழே உள்ள முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது “எனது கணக்கு” பக்கத்தில் மாற்றுங்கள்.

12. குழந்தைகள்

இந்தத் தளம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கானது அல்ல. அவர்களின் தகவலை நாங்கள் தெரிந்தே சேகரிப்பதில்லை.

13. கொள்கையில் மாற்றங்கள்

இந்தக் கொள்கையை நாங்கள் மாற்றலாம். மாற்றங்கள் இந்தப் பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தேதியுடன் வெளியிடப்படும்.

14. வரைபடம் (Google Maps)

சில பட்டியல்களில் உரிமையாளர் அளித்த இடம் Google Maps வரைபடமாகக் காட்டப்படலாம். “வரைபடத்தைக் காட்டு” பொத்தானை நீங்கள் அழுத்தும்போது மட்டுமே வரைபடம் ஏற்றப்படும்; அழுத்தும் வரை Google-க்கு உங்கள் தகவல் எதுவும் அனுப்பப்படாது. அழுத்திய பிறகு Google உங்கள் IP முகவரி, உலாவி விவரங்களைப் பெறலாம்; Google cookies பயன்படுத்தப்படலாம். அது Google-ன் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டது. உரிமையாளர் கொடுத்த Google Maps இணைப்பிலிருந்து இடத்தை அறிய எங்கள் சர்வர் அந்த இணைப்பைத் திறக்கலாம். வரைபடத்தில் காட்டப்படும் இடம் உரிமையாளர் அளித்த தகவல்; அது துல்லியமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

15.பார்வை எண்ணிக்கை

ஒவ்வொரு பட்டியலும் நாள்வாரியாக எத்தனை முறை பார்க்கப்பட்டது என்ற எண்ணிக்கை மட்டும் சேமிக்கப்படுகிறது. இதில் உங்கள் பெயர், மொபைல் எண், IP முகவரி சேமிக்கப்படுவதில்லை. ஒரே நபரின் மீண்டும் மீண்டும் வருகையை எண்ணாமல் இருக்க, உங்கள் IP முகவரி மற்றும் உலாவியிலிருந்து உருவாக்கிய குறியீடு 30 நிமிடங்களுக்கு மட்டும் தற்காலிகமாக வைக்கப்பட்டு தானாக அழிக்கப்படும்; உங்கள் உலாவியின் தற்காலிக நினைவகமும் (session storage) இதற்குப் பயன்படுகிறது. இந்த எண்ணிக்கை அந்தப் பட்டியலின் உரிமையாளருக்கும் நிர்வாகிக்கும் மட்டும் தெரியும்; இது தோராயமான எண்ணிக்கை.

16. மின்னஞ்சல் பயன்பாடு

நீங்கள் உங்கள் கணக்கில் மின்னஞ்சல் சேர்த்தால், அதை உறுதிப்படுத்தும் இணைப்பை அனுப்பவும், உங்கள் பட்டியலின் நிலை (வெளியிடப்பட்டது, வெளியிடப்படவில்லை, திருத்தம் தேவை) பற்றித் தெரிவிக்கவும் பயன்படுத்துவோம். இவை சேவை தொடர்பான அறிவிப்புகள். விளம்பர மின்னஞ்சல்கள் உங்கள் தனி ஒப்புதல் இல்லாமல் அனுப்பப்படாது. இந்த மின்னஞ்சல்கள் சில சமயம் Spam / Promotions பெட்டிக்குச் செல்லலாம்.

17. புகைப்படங்களில் லோகோ

பதிவேற்றப்படும் சொத்துப் புகைப்படங்களில் ACMAA Property லோகோ தானாகச் சேர்க்கப்படுகிறது. உரிமை தொடர்பான புகார் அல்லது தவறான பயன்பாடு குறித்த விசாரணைக்காக, அசல் படம் பொதுவில் காட்டப்படாத பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படலாம்.

18. தொடர்பு மற்றும் குறை தீர்ப்பு

குறை தீர்ப்பு அலுவலர்: Arumugam K
மின்னஞ்சல்: info@acmaaproperty.com
அஞ்சல் முகவரி: 11/2 North Car Street, Ponnamaravathi, Pudukkottai – 622407.

📲 ஆப் போல நிறுவு
iPhone-இல் நிறுவ:
1) Safari-யில் கீழுள்ள Share ⬆︎ பொத்தானைத் தொடவும்
2) "Add to Home Screen" தேர்ந்து Add தொடவும்